Wednesday, March 25, 2009

தமிழ்த் தேசிய தந்தை






சென்னை ஆயிரம் விளக்குப்பகுதியில் பிறந்து (20.05.1845 ) சிறுவயதில் நீலமலைக்கு குடிபெயர்ந்து அங்கே ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி 1870 இல் 'அத்வைதானந்த சபை ' ஒன்றை நிறுவி கிருத்துவ மத மாற்றத்திற்கு எதிராக செயல் பட்டார். அவரது குடும்பம் வைணவ மத மரபுகளை பின்பற்றியவர்கள்.





அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதனுடைய இறைக்கொள்கை - சடங்குவாதம் -ஆண்மீகக்கொள்கை - மத பண்பாட்டுத்தளங்கள் என அனைத்து வடிவங்களுக்க்ம் எதிரான ஒரு பகுத்தறிவு ரீதியான விடுதலை மெய்யியலே அவரது தேடலாக இருந்தது. அதன் அடிப்படையில் சுய சிந்தனை, சுய கருத்தியல் தேடலாக்கவுமிருந்தது.










பண்டிதருடைய காலத்தில் இந்துத்துவம் மீட்டுருவாக்கம் செய்த காலம். பிரம்மா சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் அனைத்தையும் இந்துக்குள் வலிய திணித்த காலம். 1861 - 1891 வரை 'யாரெல்லாம் கிறித்துவர்கள் இசுலாமியர்கள் இல்லையோ அவர்களெல்லாம் "இந்து" என பதிவு செய்த காலம்.



பண்டிதர் வைணவ மரபை ஆதரித்தாலும் "இந்து" என்ற அடையாளத்தை ஏற்க மறுத்தார். அவ்வாறு இந்து அடையாளத்தை ஏற்றுக்கொண்டால், இந்து சமூகத்தின் சாதிய அமைப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். தீண்டாமை,காணாமை, சாதியக் கொடுமையை அதிகமாக அனுபவகிக்கும் தலித்கள் ஒருபோதும் "இந்து" அடையாளத்தை ஏற்கக்கூடாது அதற்கு மாற்றாக ஒரு அடையாளத்தை தேடத்துவங்குகிறார். தமிழகத்தில் அப்போது பக்தி வடிவங்களில் தமிழ்-சைவ மீட்டுருவாக்கம் முயற்சி நடந்தது. இது ஒருவகையில் சாதியத்தை உள் வாங்கலின் ஒரு முயற்சியாகவே இருந்தது. அதாவது தமிழ்-சைவம் பிராமண எதிர்ப்புப் பேசியது 'சாதி ஒழிப்பு ' குறித்து மௌனம் காத்தது என்பதால் தமிழ்-சைவத்தோடு இணைய வில்லை.



இதற்கிடையில் 1881 களில் ஆங்கில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் புகுந்து தலித்துகளுக்கு தனித்துவமான் அடையாளத்தை பதிவு செய்கிறார். "ஆதிதமிழன்" original tamils என்று பதிவு செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறார். அப்போதெல்லாம் சாதியைச் சொல்லித்தான் அழைப்பார்கள். சாதிதான் தமிழனுக்கு அடையாளமாக இருந்தக்காலம். அரிஜன் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை அதற்கு பதிலாக "பஞ்சமர்கள்" என்றும் Depressed Class என்று அழைப்பதை மறுத்து "ஆதி தமிழன்" என அழைத்தார். சாதியின் பெயரால் அழைக்கப்பட்ட தமிழர்களை சாதியற்ற தமிழர்களாக பதிவு செய்தார். இழிவான பெர்யர்களை மறுப்பது என்பது கூட சாதி ஒழிப்புக்கு வழிஎன்றார். 1886 ஆண்டில் "ஆதி தமிழர்கள் (தலித்கள்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல" என அறிக்கைவிட்டார். "நீண்ட காலத்த்ற்கு முன் நிலவிய பிராமணிய எதிர்ப்பு மரபின் வாரிசுகளே அவர்கள்" என்றார். தமிழ், தமிழன் அடையாளத்தை தலித் மக்களை மையமாகக்கொண்டு ஒரு தேசியத்தை கட்டமைக்க முயற்சிக்கிறார்.
















பிரம்மா ஞான சபை ஆல்காட் ( 1832 - 1907 ) ஏற்பட்ட தொடர்பால், தீண்டதாருக்கு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், சென்னையில் முக்கியமான் 5 இடங்களில் "ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் " என தலித்துகளுக்கு இலவச பள்ளிகளை நிறுவினார். இருந்தபோதும் பிரம்மா ஞான சபை பண்டிதரின் தேடலுக்கு இசைவானதாக இல்லை. கல்வியால் மட்டுமே தலித் மக்களை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தலித்துகளுக்காக ஒரு பெரிய பள்ளியை சென்னையில் நடத்திய அருட் திரு.டி. ஜான் ரத்தினம் அவர்களோடு நட்புகொண்டார், அவரோடு "திராவிட பாண்டியன்" இதழ் நடத்தினார். இருந்தும் ஜான் ரத்தினம் போல கிறித்துவ மதத்திற்கு மாறவில்லை. இந்தியாவில் அப்போதிருந்த ஒரே கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி. அதை "இந்து" பிராமணக் கட்சி என்று ஒதுக்கிவிட்டார். மேற்கண்ட அனதைது அமைப்புகளிலிரிந்தும் வேறுபட்டும் அவற்றிக்கு எதிராகவும் சுய அரசியலை சுய கருத்தியலை நோக்கி நகர்கிறார்.



ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குவதற்காக எழுப்பிய பண்பாட்டு , மதத் தடைகளை நீக்குவது மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் மெய்யான விடுதலையை கொண்டுவரும். அதற்கான மரபுகளைத் தேடிக்கண்டுபிடிதார். அது "பௌத்தம்" என்ற சாதி ,வருண எதிர்ப்பு மதம்தான் பண்டிதருக்கு புகலிடமாகபட்டது. ஆல்காட்டின் உதவியோடு 1898 இல் பௌத்தம் தழுவினார்.



சென்னை இராயப்பேட்டையில் 'சாக்கிய பௌத்த சங்கம் ' நிறுவினார். சாதியற்ற திராவிடர்களுக்கு முன்னோர் வரலாறுகளையும் பௌத்த தன்மத்தையும் விளக்குதல் மற்றும் நற்பண்பிலும் சமய ஒழுக்கத்திலும் தலித்துகளை முன்னேற்றுதல் போன்ற நோக்கங்களாக இருந்தது.


பண்டிதர் நடத்திய ஏழு ஆண்டு தமிழன் இதழ்களை காலவரிசையில் பார்த்தால், பண்டிதரால் உருவாக முடிந்த மாற்றுச் சிந்தனைகள், மாற்றுக் கதையாடல்கள், மாற்று வரலாற்ரைகாணலாம். சுய அரசியல் உருவாக்கத்தைக் காணலாம்.









  • சாதி இழிவை அகற்றுவது





  • இழிதொழில்களை, சாதிப் பெயர்களை மறுத்தார்.அவர்களை சாதியர்றோர் என புதிய வரலாற்றை எழுதினர்.





  • தலித்களுக்கு விடுதலையும் அதிகாரமும் வேண்டுமெண்டார்.





  • சமுதாய சமத்துவம், சாதி பேதமற்ற சமூகத்தை கட்டமைக்க விரும்பினார். அதற்கு பண்டிதர் வழிகாடியகவும் இருக்கிறார்.





  • பிராமணீய இந்துமத எதிர்ப்பு யாவும் தன் சொந்த பட்டறிவின் மூலம் பெற்ற ஞானமாகும்.


பண்டிதர் காலத்தில் வெளிவந்த தமிழ் இதழ்களின் பெயர்கள்


ஞான போதினி, பிரம்மா ஞானபோதினி, சுகிர்த வர்த்தமானி, நீலலோசினி, விகடதூதன், சுதேசமித்திரன், பிரபஞ்ச மித்திரன், புதுவை மித்திரன், நாஞ்சில் நேசன் தென்ன்னிந்திய டைம்சு....என வடமொழியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த காலத்தில் , இன உணர்வேடு , இனிய தமிழில் தமிழன் எனபெயர் சூட்டி ஒரு வார ஏட்டை நடத்திய முதல் தமிழ்த்தேச உணர்வின் முன்னோடி பண்டிதர் க அயோத்திதாசர் ஆவார்.






இந்திய பாரம்பரியம் பௌத்தம் மதமாக இருந்தது என்பார். அதனை தன் தமிழ் புலமை மூலம் விளக்குகிறார். இந்தியா என்ற சொல் 'இந்திரம்' என்பதின் திரிபு. இந்தியாவை புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு 'இந்திரதேசம்' என்ற பெயர் வந்தது. ஆரியர் வருக்கைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது. இந்த தேசியத்தை பவுத்தம் உருவாகியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம் ,சமயம், அறக்கருத்தொற்றுமை,மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அந்நியரான வெளியாரின் ஊடுருவால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர மாயத்தன்மையென திரிக்கப்பட்டது. அதாவது சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்ட்கள் நசித்து திரித்துவிட்டார்கள்.






"மண்ணின் மைதர்களே இமண்ணை ஆளவேண்டும்" என்கிறார். 30-10-1912 தமிழனில் எழுதுகிறார் சுதந்திரம் அளித்தால் இம்மண்ணின் மைந்தரான தமிழருக்கே வழங்கவேண்டும் என்றார். " தமிழ் மொழியில் பிறந்து, தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்குச் சொந்தமான பூர்வக்குடிகள் சுதேசிகளுக்கு வழங்கவேண்டும் " மேலும் " கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வகுடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னர் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் என கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால், நாடு பாழாகி சீர்கெட்டுவிடும்" என நாடு விடுதலை பெற 35 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கார் 1930 களில் தலித்கள் ஒரு தேசத்தை ஆளுகிற வர்க்கமாக மாற வேண்டுமென்கிறார்.

பிறப்பால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி நடைபோடும் ஓர் அரசியல் கருத்தியலை உருவாக்கும் ஒரு தேசியத்தை கட்டமைக்கவேண்டும். அதற்கு நாம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வெண்டும். அதற்கு பண்டிதரும், புரட்சியாளரும் வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment