Thursday, March 10, 2011

வரலாற்று மோசடி







வரலாற்று மோசடி

பாரி. செழியன்.






. சனவரி 25 மொழிப்போர் தியாகிகள் 'வீரவணக்கம்' நாள், வழக்கம் போலவே எவ்வித செயல்திட்டம், அறிவிப்புகள் ஏதுமின்றி ஒரு சடங்காகவே இவ்வாண்டும் அனுசரிக்கப்பட்டது. தமிழக முதல்வர் முதல் திராவிட, தமிழ்த்தேசிய, தோழர்கள் வரை 1965 வருடம் அதாவது நான்காம் மொழிப்போராட்டம் பற்றியே பேசினார்கள். எந்த ஒரு போராட்டத்திலும் முதலில் களப்பலியானவரின் நினைவைப் போற்றுவதே இயல்பு. 1938 ஆம் ஆண்டு நடந்த முதல் இந்தி எதிர்ப்போரில் தமிழுக்காக முதன்முதலாக உயிரைத் தந்த சனவரி 15 நாளையே மொழிப்போர் தியாகிகள் நாளாக அறிவிக்க வேண்டும் அதுதான் பொருள்பொதிந்தது. அதற்கு மாறாக முப்பது ஆண்டுகளுக்குப் பின் 1965 ஆண்டு சனவரி முதல் மார்ச் வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டதில் பலர் உயிர்த் தியாகம் செய்த நாளையே சனவரி 25 நளையே 'மொழிப் போர் தியாகி நாளாக அறிவித்துக் கொண்டாடுவது, முதல் மொழிப்போரில் தமிழுக்காக உயிர் தியாகம் செய்தது முக்கியத்துவமில்லாமல் இன்றும் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது

1937 ல் நடைபெற்ற சென்னை மாகான பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி தோற்றது. அத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சி இந்தி திணிப்பைத் தன்னுடைய கொள்கையாக கொண்டிருந்தது. சென்னை மாகானத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி மொழியைக் கட்டாயப்பாடமாக வைக்கபோவதாக முதலைமைச்சர் இராசகோபாலாச்சாரி அறிவித்தார். இந்தி மொழியை நம் மாணவர்களுக்கு பாடமாக வைத்தால் நம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு கேடு வரும், அதோடு நம்முடைய பண்பாடு,கலாச்சாரம் அழிந்துவிடும் என்பதை உணர்ந்த தமிழர்கள் கூட்டங்கூட்டமாக அணிதிரண்டு, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள். இதுதான் முதல் இந்தி எதிர்ப்போராட்டம் இதுவரையில் ஏழு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இன்றும் அது முடியவிலை.

1. முதலாம் மொழிப்போராட்டம் - 1937 - 1940

2 இரண்டாம் மொழிப்போராட்டம் - 1948 - 1950

3 மூன்றாம் மொழிப்போராட்டம் - 1952
4 நான்காம் மொழிப்போராட்டம் - 1963 - 1965
5 ஐந்தாம் மொழிப் போராட்டம் - 1967 - 1968
6 ஆறாம் மொழிப் போராட்டம் - 1986 - 1987
7 ஏழாம் மொழிப் போராட்டம் - 1993 - 1994.
திராவிட இயக்கங்கள் உருவாகத காலம். மக்களின் தமிழ் மொழி உணர்வை, இந்தி திணிப்பு எதிர்ப்புணர்வை ஒருங்கிணைத்து வ்ழிநடத்திச் சென்றவை தமிழ் அமைப்புகளே. கரந்தைத் தமிழ்சங்கம், திருவையாற்றுச் செந்தமிழ்கழகம், உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவை, நாமக்கல் தமிழ்ச் சங்கம், தென்காசி திருவள்ளுவர் கழகம், நெல்லைத் தமிழ்ப் பாதுகாப்பு சங்கம்..... போன்ற தமிழ் அமைப்புகளும், வேங்கடாசலம், உமாககேசுவரனார், சோமசுந்தர பாரதியார்,, கா.சுப்பிரமணியம், கு மு அண்ணல் தாங்கோ போன்ற தமிழறிஞர்கள் தலைமையேற்று நடத்திய இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்கள், சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களின் விளைவாக தமிழகம் முழுவதும்(ஆந்திரா,கேரளா,கர்நாடகம் உள்ளடக்கிய சென்னை மாகானம் என்றாலும் அங்கெல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறவில்லை) தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் குறிப்பாக தொல் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் இந்தியெதிர்ப்பு போர் கொழுந்துவிட்டு எரிந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களி மிக அதிகமாக தொல் தமிழர்கள் கல்ந்துகொண்டு சிறை சென்றனர். அதை " சிறையில் ஒழுங்காக சாப்பாடு கிடைக்கும் என்பதால் பல ஹரிசனங்கள் கைதாகியுள்ளார்கள்" என்று டாக்டர் சுப்புராயன் சட்டமன்றதில் தொல் தமிழர்களின் தமிழுணர்வை பகடி செய்தார். இதையே " அற்பக்கூலிகளுக்கு அமர்த்தப்பட்ட கூலிகள்" என முதலைமச்சர் இராசாசி கேவலப்படுத்தினார். இந்த முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழுக்காக முதன்முதலில் 15.01.1939 ல் தன்னுயிரை ஈகம் செய்தவர் எசு.நடராசன் என்ற தொல் தமிழர். அவருக்கு அடுத்தே மூன்று மாதங்களுக்கு பின்னர் இடை நிலைச்சாதியைச் சேர்ந்த தாளமுத்து 11.03.1939 ல் உயிர்த்தியாகம் செய்தார். ஆனால் வரலாற்று ஏடுகளில் பெயர்ச்சூட்டலில்' தாள்முத்து நடராசன்" என்று தாளமுத்து முன்பாகவும் நடராசன் இரண்டாவது இடத்திற்கு ஒதுக்கியது. அதை உண்மையாக்கும் பொருட்டு அரசு மாளிகையொன்றிற்கு 'தாளமுத்து நடராசன் மாளிகை' என பிழையான வரிசையில் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.

சென்னை வள்ளலார் நகரையடுத்த மூலக்கொத்தளம் சுடுகாட்டில் இருக்கும் நினைவுச்சின்னத்தில் 'நடராசன் தாளமுத்து' என்று சரியான வரிசையில் எழுதப்பட்டுள்ளது. இந்த சரியான பெயர் வரிசை 1960 வரையில் சரியாக உச்சரிக்கப்பட்டு வந்துள்ளது. 1952 களில் ஆதிதிராவிடர் நலவுரிமைஸ் சங்கம் சார்பாக திறக்கப்பட்ட 'நடராசன் தாளமுத்து' நூல் நிலையத் திறப்பு விழா அழைப்பிதழில் 'நடராசன் தாளமுத்து' நூல் நிலையத்தை, சினிமா நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன், கலைஞர் மு.கருனாநிதி, டைரக்டர் கிருஷ்ணன்பஞ்சு அகியோர் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்கள். அதே கலைஞர் மு கருனாநிதிதான் வரலாற்று உண்மையை மாற்றிப்போட்டு 'தாளமுத்து நடராசன்' என்று உச்சரிக்கிறார். அரசு மாளிகை ஒன்றிற்கு அப்படியே பெயர் சூட்டி வராற்று மோசடி செய்கிறார்.









தமிழ்மொழி காக்க உயிர்விட்ட நடராசன் பிணத்தை,மரணத்தை வைத்துதான் தமிழ்மொழி உணர்ச்சியை உசுப்பிவிட்டார்கள். " நடராசன் அவர் குடியில் ஒரே பிள்ளை. நம் மகன் சிறையிலிருந்து வருவான் அவனுக்கு திருமணம் செய்வோம் என் எண்ணிய நடராசன் பெற்றோர் ஏமாற்றமுற்றதையும் வருத்தமாகக் கூறி மணக்கோலத்தில் போக இருந்த நடராசன் அநியாயமாகப் பிணக்கோலத்தில் சென்று விட்டாரே" என்று நடராசன் இறுதி நிகழ்ச்சியில் கு.மு.அண்ணல்தங்கோ அவர்கள் உருக்கமாக பேசியுள்ளார்.ஆற்றல் மிக்க பேச்சாளர் முன்னால் முதல்வர் சி..அண்ணாத்துரை அவர்கள் " அதோ, அங்கே படுத்திருக்கிறார் நடராசன். அவருடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. அவருடைய இரத்தம் ஓடுவதை நிறுத்திவிட்டது. அவருடைய கேசம் சிலிர்த்து நிற்கிறது. ஆனால் அவருடைய முகத்தைப் பாருங்கள் தன்னுடைய கலாச்சாரத்திற்காவும், விடுதலைக்காகவும் போராடி, அப்போடிரில் தன் இன்னுயிர் ஈந்த ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம். பல்லாயிரக்கணக்கில் கூடிய நீங்கள், ஓர் உறுதி மொழியினைத் தருவீர்களா? நாம் விரும்பாத ஒரு மொழியினை எதிர்த்துப் போரிட்டு, ஐயகோ! நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீரவாழ்வை, நாங்களும் பின்பற்றுவோம் என்ற உறுதி கொள்வீர்களா?. இந்தியைப் புகுத்துவதால் நம் மொழி தமிழுக்கு குந்தகம் விளைந்திடுமா? என யாராவது கேட்டால் அவரிடம் கூறுங்கள். இந்தி வந்தது அதனை நுழையவிடாமல் தடுக்கும் போராட்டத்தில் ஒரு தமிழன் உயிர்துறந்தான்". என்று அண்ணத்துரையின் இந்த உணர்ச்சிப் பேச்சு தமிழருக்கு தமிழ் மொழியுணர்ச்சியை உசுப்பிவிட்டது.அந்த மொழியுணர்ச்சியே அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது. ஆனால் திமுக அமைத்த மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் நடராசனின் படம் கடைக்கோடியில்.

தமிழ்மொழிக்காக உயிர் விட்ட நடராசனின் மரணம் குறித்து விளக்கம் தந்த முதலமைச்சர் ராசாசி, " நடராசன் படிபறிவில்லாதவர், அதனால்தான் அவர் மறியலில் ஈடுபட்டார். அவரைப்போல படிப்பறிவில்லாத அப்பாவிகளை இந்தி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்" என்றார், அதற்கு கடுமையான கண்டனம் எழுந்தது. நடராசனின் தந்தையார் முதல்வர் ராசாசியின் விளக்கத்தை மறுத்து, " இந்தி எதிர்ப்பிற்காக மறியலில் ஈடுபட்டு நடராசன் கைதானபோது அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்துவிடுகிறோம்" என அரசு அதிகாரிகள் அவரிடம் வற்புறுத்தியுள்ளீர்கள். ஆனால் " கோழையாக வாழ்வதைவிட வீரனாக சாவதைதே நான் விரும்புகிறேன்" என நடராசன் கூறியுள்ளார். அப்படியயே வீரமரணமும் ஏய்துவிட்டார்.














தமிழ்மொழி உணர்வை மூலதனமாக்கி ஆட்சியில் அமர்ந்த திராவிடக் கட்சிகள். தமிழுக்காக இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் விட்ட நடராசனை இருட்டடிப்புச் செய்துததுமட்டுமல்ல வரலாற்றுக்கு நேர்மையில்லாமல் மோசடி செய்கிறது. திராவிட கட்சிகள் மட்டுமல்ல, தமிழ்த்தேசிய அமைப்புகள், சாதி ஒழிப்பு, சமூக நீதி, மைக் தொழிளாலர்கள், எல்லாமே தாளமுத்து நடராசன் என்றே பதிவு செய்கின்றன. 26.01.2011 ஜு வி யில் சீமான் எழுதும் தொடரில் நடராசனை மட்டும் தனித்து ஒதுக்கிமறைத்துவிட்டு மற்ற அனைவரையும் மொழிப்போர் தியகிகளென படம் காட்டுகிறார். அடிப்படை தமிழக வரலாறு கூட தெரியாத இதெல்லாம் தமிழகத்தை ஆளனுமாம். தமிழியம் பறம்பை அறிவன் அவர்கள் வழங்கிய 'தமிழிய வரலாற்றுப் பேரவை' யின் நாள்காட்டியில் தமிழர்களின் முக்கிய நாள்கள் என்கிற தலைப்பில் ' மார்ச் 14 - தாளமுத்து நடராசன் தோற்றம் ' என குறிப்பிட்டுள்ளது. இதில் என்ன பொருள் இருகிறது? தலித்களின் நண்பர் என்று சொல்லிக்கொண்டே தலித்களின் ஆளுமைகளை, வரலாற்றை திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்வதை எந்த நடுநிலையாளர்களும் கேள்வி கேட்பதில்லை. சாதியடிப்படையில் ஒருவரின் உயிர் தியாகததை இழிவு படுத்தமுடியுமா? இவர்கள் பேசும் சாதி ஒழிப்பு, சமூக நீதி... எந்தளவிற்கு நம்பகத்தன்மையானதாக இருக்கும்?

இன்னும் விரிவாக அறிய
1 என்று முடியும் இந்த மொழிப்போர் - 1994- . இராமசாமி
2 திரவிட இயக்கமும் மொழிக்கொள்கையும் - 1991-கோ.கேசவன்
3 அறவுவாழி - ஏப்பிரல் - 1999
4 தூய தமிழ்க் காவலன் கு மு அண்ணல்தங்கோ - 1999
5 The Political Career of E.V.Ramasami Nicker -1983 - Dr.E.Sa.Visswanathan
( Translated by Prof. P.S. Panneer Selvam)
6
மொழிப் போர் தீண்டப்படாத தியாகம் - 2005 - இரவிக்குமார்
7 பெரியார்: தமிழ், தமிழர், தமிழ்நாடு - 2007 - தொல்தமிழன்

Tuesday, March 8, 2011

கி மு 3 நூற்றண்டு பாறைக்குகைகள்
















கி மு 3 நூற்றண்டு பாறைக்குகைகள்

மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்கோவில் அருகில் கி மு 3 நூற்றண்டுகளில் உருவாகப்ப்ட்ட பாறைக்குகைகள் இரண்டை நேற்று பார்த்து வந்தேன்.

பௌத்த துறவிகள் ஊருக்குள் வசிக்கமாட்டார்கள், அதனால் ஊருக்கு வெளியே மலை பாறைக் குகைகள் அமைத்து வசிப்பது வழக்கமாம். இலங்கையை ஆண்ட மன்னன் தேவனாம்பரியதிஸ்ஸன் உடைய தாய்மாமன் 'அரிட்டர்' என்ற பௌத்த பிக்கு, அசோக மன்னருடைய உறவினர் மகேந்திரருடன் சேர்ந்து பாண்டிய நாட்டில் பௌத்தத்தை பரவச்செய்தார்களாம். இந்த ஊருக்கு அருகில் மலைக்குகையில் அரிட்டர் தன் சீடர்களுடன் வசித்துவந்திருகிறார். அவர் பெயராலே இந்த ஊருக்கு அரிட்டாபட்டி என அழைக்கபடுகிறதாம். அரிட்டாமலை என்றும் பெருமாள் மலை என்றும் அழைக்கபடும் இந்த மலையில் தரையிலிருந்து 2 மையில் உயரத்தில் உள்ளது அரிட்டர் வாழ்ந்த கற்குகை. பெரிய திருமண மண்டபம் போல மிக பிரமாண்ட கற்குகை. இன்றும் அதே கம்பீரத்தோடு சிதலமடைந்து நினைவுச்சின்னமாக இருக்கிறது.







இன்னொன்று பஞ்ச பாண்டவ படுக்கை குகை என்ற பௌத்த துறவிகளின் 5 படுக்கை குகையைப்பார்த்தேன். இந்த பெயர் எப்படி வந்தது என அறிய முடியவில்லை. அழகர்கோவிலிருந்து 4 மையில் தூரத்தில் உள்ள உப்போடைப்பட்டி என்ற் கிராமதிலிருந்து 2 மையில் தொலைவில் உள்ளது பஞ்ச பாண்டவ படுக்கைகுகை. இதுவும் பெரிய மிரமிப்பை







ஏற்படுத்தியது. 50 அடி அகலம் 150 அடி நீளம் தெற்கு பார்த்த திரந்த வெளி. அருகில் எப்போதும் வற்றாத தண்ணீர்குளம். 5 பௌத்த துறவி வசிப்பதற்கு தனித்தனியே சிறுசிறு குகைகள். தனித்தனியே கற்பாறையில் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளது. உச்சிவெயில் உக்கிரத்திலும் அங்கே மிக குளுர்ச்சியான தென்றல் வீசியது வியப்பாக இருந்தது.



மேற்கண்ட 2 வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்கள், மாமன்னர் அசோக சக்ரவர்த்தியின் மகன் அல்லது தம்பி மகேந்திரன் தங்கி உலாவிய இடம் இன்று பாழடைந்து, சிதலமாகி தன் சுயம்பை இழந்து நிற்கிறது. சில சமூக விரோதிகளுக்கு அதுவே கூடாரமாகவும் அமைந்துவிடுகிறது. அவற்றை பாதுகாகிற எண்ணம் அரசுக்கு இல்லை. வேத மத மறுப்புக் கருத்துகளை பரப்பிய திராவிட கட்சி ஆட்சியில் இதுபோல இந்த்துவ பாசிச சக்திகளுக்கு எதிராக சமத்துவத்தை கற்பிக்கும் பௌத்த, சமண, ஆசீவக நெறிமுறைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.






விரிவாக அறிய, மயிலை. சீனி. வேங்கடசாமி எழுதிய 'பௌத்தமும் தமிழும்' நூலை படிக்கவும்